புதன்கிழமை, ஆகஸ்ட் 19
Shadow

NEWS

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, 'நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? 'நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' தன்னை நல்லதோரு வீணையாகவும் அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகை...
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில...
ஈரோட்டில் போலிமதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

ஈரோட்டில் போலிமதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மது பாட்டில்கள் போலியானது என்றும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும் காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கும்பகோணம் போலீசார் ஈரோடு போலீசாருடன் இணைந்து ஈரோடு சூளை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலியாக ஒரு மது தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு இருந்த 4பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிசென்று மடக்கி பிடித்தனர். மேலும் போலீசார் மதுபான தொழிற்சாலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலி மது பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களான எரிசாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ...
தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.40-க்கு விற்பனை!

தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.40-க்கு விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இறுதிவரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியதால் விலை திடீரென அதிகரித்தது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க...
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன....
கனடாவில்  ரஹ்மானை கவுரவிக்கும்  வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தெரு!

கனடாவில் ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தெரு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான். தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....
கனல் கண்ணன் வழக்கு.. காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

கனல் கண்ணன் வழக்கு.. காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
1991-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன்பின்னர் நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாளான படங்களுக்கு இவர் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச...
9 நொடிகளில் தகர்கப்பட்ட நொய்டா இரட்டை கோபுர 40 மாடி கட்டிடம்!

9 நொடிகளில் தகர்கப்பட்ட நொய்டா இரட்டை கோபுர 40 மாடி கட்டிடம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வெறும் 9 நொடிகளில் தகர்கப்பட்ட 40 மாடி கட்டிடம் இது வரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட இடிப்பில் இதுதான் மிகப்பெரியது 3700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாக தகவல் 2004ம் ஆண்டில் இரட்டை கோபுரம் கட்டட பணி துவங்கியது. 'சூப்பர்டெக்' நிறுவனத்துக்கு 9 தளங்கள் கொண்ட 14 தளங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்ட திட்டத்தை திருத்தி, ஒவ்வொரு டவர்களிலும் 40 தளங்கள் வரை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்ற பிறகு தான் விதிமீறல் குற்றச்சாட்டு எழுந்தன. கட்டடம் உயர உயர வரைபடத்துக்கும் கட்டுமானத்தின் வடிவத்துக்கும் வேறுபாடு இருந்தது. நொய்டா பகுதியின் தட்பவெப்பம், புவியில் அமைப்புக்கு எதிராக கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2012ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ல் இடிக்க உத்தரவிட்டது. இதனை எதி...
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகள் திடீர் போராட்டம்!

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகள் திடீர் போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராமநாதபுரம் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு 200-க்கும் மேற்பட்டோர் காவலாளிகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். வார்டுகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் நோயாளிகளை சந்திக்க கட்டுப்பாடுகளுடன் உறவினர்களை அனுமதித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி காவலாளிக்கும், நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த காவலாளிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவ...
வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் –  நல்லி குப்புசாமி

வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் – நல்லி குப்புசாமி

HOME SLIDER, NEWS, செய்திகள்
    *வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் - தொழிலதிபர் நல்லி குப்புசாமி* *வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ்* சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி  ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வள...