மீளமுடியாத நோயுள்ளவர்களுக்கு ‘கருணைக்கொலை’ – இந்திய சுப்ரீம் கோர்ட் அனுமதி
சுப்ரீம் கோர்ட்டில், ‘காமன்காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு 2005-ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், ‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் முடங்கி, படுத்த படுக்கையாக கிடந்து வாழ விரும்பாதபோது, விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிற செயற்கை சுவாசத்தை அகற்றி, கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
அது மட்டுமின்றி, ‘அரசியல் சாசனம் பிரிவு 21-ன் கீழ், கண்ணியத்துடன் வாழ்வதற்கு எப்படி ஒரு மனிதருக்கு அடிப்படை உரிமை இருக்கிறதோ, அதே போன்று கண்ணியத்துடன் மரணத்தை தழுவுவதற்கும் உரிமை உண்டு என்று அறிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. இதில் டெல்லி மருத்துவ கவுன்சில் ஒரு தரப்பினராக சேர்ந்து கொள்ளவும், கருணை கொலை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் 2006-ம் ஆண்...









