ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி

நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics
நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:- இந்து, இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல்.  இந்த இரண்டு வார்த்தைகளும் மாறுபட்ட அர்த்தத்தை கொண்டது.  நான் இந்து, ஆனால் இந்துத்துவவாதி கிடையாது. மகாத்மா காந்தி இந்து, ஆனால் கோட்சே இந்துத்துவவாதி. இந்தியா இந்துக்களின் நாடு. இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர்.  ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே இந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திக்கிறார்கள்.  அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்புவதில்லை. அதை பெறுவதற்காக அவர்கள் எதையும் செய்வார...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு   தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: * தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். * ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்

மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10.9.2021 அன்று “மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேராசிரியர் முனைவர் மணிகண்டனுக்கும் தலா 3 லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான சீ...
அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம் – தமிழக அரசு தகவல்

அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம் – தமிழக அரசு தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம் - தமிழக அரசு தகவல் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் கொ.வீர ராகவராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகளின்படி, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம்களில் பல துறைகளைச் சார்ந்த வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. மேலும், இம்முகாம்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்குபெற உள்ளன. இவ்வேலைவ...
ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை போயஸ் கார்டனில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு  இழப்பீட்டு தொகையாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோருக்கு அரசு சார்பில் 67.9 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.  ஆனால் இதை எதிர்த்து தீபா ,  தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வேதா  நிலையம் தனிநபர் சொத்து என்பதால் ,அதை கையகப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் வாரிசுதாரர்களான  தங்களிடம் சொத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வேதா நிலையம் இல்லத்...
மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

HOME SLIDER, NEWS, செய்திகள்
மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர்  விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தன. இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவ...
முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுகிறார்கள்!

முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுகிறார்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுகிறார்கள்! மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயாராக இருந்தது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என விவசாயிகள் கண்டிப்புடன் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தியபோது, வன்முறை வெடித்தது. என்றாலும் தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதனால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார...
ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி நேரில் ஆய்வு!

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி நேரில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி நேரில் ஆய்வு! தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். குன்னூர் பஸ் நிலையததில் இருந்து 5. கி.மீ. தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா, நஞ்சப் சத்திரம் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அந்த இடத்தில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெலிங்டன் வந்துள்ள விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர். சவுத்ரி ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவருடன் தமிழக டி.ஜி.பி. சைல...
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டதாக விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த எதிர்பாராத விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்து விட்டதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது...
பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்!

பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அப்போது அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக பிடிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு பலர் கூடினார்கள். அவர்கள் ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளை திரும்பத்தரும் படி அங்கிருந்த கும்பலிடம் கெஞ்சினார்கள். தங்களை விட்டு விடும்படி கதறி அழுதார்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாத கும்பல் 4 பெண்களையும் சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தின் 2 வீடியோக்கள் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. அதில் 4 பெண்கள் கம்பால் தாக்கப்படுவதும், ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளும் இடம் பெற்ற...