234 தொகுதிகளிலும் தோல்வி… 3-வது இடம் இடம்பிடித்த நாம் தமிழர் கட்சி!
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், அ.ம.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்பட கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. பெரும்பான்மையான கட்சிகள் கூட கூட்டணி வைத்து தான் இந்த தேர்தலை சந்தித்தன. ஆனால் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல இந்த முறையும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.
நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே தான் களம் கண்டு இருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்து களத்தில் போட்டியிட்டு வருகிறது. அந்தவகையில் 2016-ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 1.10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்ட...









