ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்!

கொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கொரோனா அச்சம்... வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் - நடிகை பிரியா வாரியர்! மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “எனது அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். வீட்டில் 60 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன். கொரோனாவில் இருந்து தப்பிக்க படப்பிடிப்பில் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வேறு நகரங்களில் இருந்து வீட்டுக்கு போகும்போது 2 நாட்கள் யாருடனும் சேராமல் தனியாக இருப்பேன். சாப்பாட்டை எனது அறைக்கு அனுப்ப சொல்வேன். முக்கியமாக எனது தாத்தா, பாட்டி அருகில் நான் போகவே மாட்டேன். வீட்டில் எங்கு சுற்றினாலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன். 2 நாட்கள் எந்த அறிகுறிய...
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

HOME SLIDER, NEWS, politics
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார் மாநிலத்தில் புதிதாக 22,414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 5,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசிகளை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கொரோனாவால் மாநிலங்கள் ஏற்கெனவே நிதிச் சுமையில் உள்ளன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடாமல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கேரள அரசு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும் என்றார். முன்னதாக கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க கோரி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
டேங்கரில் திடீர் கசிவு… ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு!

டேங்கரில் திடீர் கசிவு… ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு! நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமான அளவு அக்சிஜன் இல்லை. இதனால் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் உள்ள டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் டேங்கரில் திடீரென கசிவு ஏற்பட்டது. டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயு கசிவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். எனினும் இந்த விபத்தைத் தொடர்ந...
‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்!

‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்! அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது உலகமெங்கிலும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் ஸ்பெயினுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் அந்த சண்டைக் காட்சியை இந்தியாவிலேயே படமாக்கலாமா? என்று வலிமை படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின...
நீதி வென்றுவிட்டது… ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்!

நீதி வென்றுவிட்டது… ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நீதி வென்றுவிட்டது... ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்! அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தனது கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது. ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசா...
ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி? தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற (25-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. என்றாலும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும். இந்த பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்த திருமணங்களையும் நிறுத்தவேண்டியது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்த...
விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை!

விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை! சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானார். இது திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் விவேக் ஈடுபட்டிருந்தார். 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்ட நிலையில் அவர் தனது இலக்கை அடையும் முன்னரே காலமாகிவிட்டார். இந்த நிலையில் விவேக் விட்ட பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆத்மிகா, மறைந்த விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஆத்மிகா கூறும்போது, நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய மு...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. முககவசம் அணிவதை தீவிரப்படுத்த அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. என்றாலும், கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வா...
ராகுல் காந்திக்கு கொரானா பாதிப்பு..!

ராகுல் காந்திக்கு கொரானா பாதிப்பு..!

HOME SLIDER, NEWS, politics
  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் https://twitter.com/RahulGandhi/status/1384442319638867969?s=19  ...