ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று!

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். நடிகர் அக்சய் குமார், ராம்சேது என்கிற படத்தில் நடித்துவருகிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்க இருக்கிறார்கள். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொ...
எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது!

எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது! உலகின் கடல் வழித்தடத்தின் முக்கிய பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில், கடந்த மாதம் 23-ந் தேதி ‘எவர் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் குறுக்கே சிக்கியது. கால்வாயை கடந்து சென்றபோது பலத்த காற்றால் கப்பல் திசைமாறி இருபுறமும் தரை தட்டியது. ஆனால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஏராளமான சரக்கு கப்பல்கள் நடுவழியில் காத்து கிடந்தன. கால்வாய் குறுக்கே சிக்கிய 2.20 லட்சம் டன் எடை கொண்ட எவர் கிவன் கப்பலை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். தரை தட்டிய பகுதியில் மணல்களை அகற்றியும், இழுவை கப்பல்கள் மூலமும் மீட்பு பணி நடந்தது. 6 நாட்களுக்கு பிறகு எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டது. பலத்த காற்று, ராட்சத அலை மற்றும் மீட்பு பணி காரணமாக கப்பல் மிதக்க தொடங்கியது. பின்னர் கப்பலை இழுவை கப்ப...
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை! தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டிருக்கும். 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் தகவல் நேற்று அறிவிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால் குடிமகன்கள் கூட்டம் ஒவ்வொரு மதுக்கடைகளிலும் அதிகம் காணப்பட்டது. துரைப்பாக்கம், கிண்டி, குன்றத்தூர், அம்பத்தூர், டி.பி.சத்திரம், புழல், மாதவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் முண்டியடித்தபடி மதுபாட்டில்கள் வாங்கினார்கள். ஒருசில இடங்களில்தான் வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கினார்கள்....
ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்!

ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்! இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், 67-வது தேசிய விருது வழங்கும் விழா, வருகிற மே மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினமே நடிகர் ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெற உள்ளனர். இது அவர்களது குடும்பத்தினர் மற்றுமின்றி, ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது....
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை! தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரப...
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை! கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் ரவிக்குமார் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- 1. கர்நாடகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்பு மற்றும் வித்யாகம வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் 10 முதல் பி.யூ.கல்லூாி வரை நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதில் மாணவர்களின் வருகை கட்டாயமல்ல. 2. கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் வகுப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகம், மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்...
கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்!

கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்! இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்தில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை இங்கிலாந்து சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்படி, இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர்த்து பிறர் வருவதற்கு தடை விதிக்கப்படும். இந்த பயண தடையானது, வரும் ஏப்ரல் 9-ம் தேதி காலை 4 மணியில் இருந்து அமலு...
வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்! நடிகை அனு இம்மானுவேல், தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வருவது அம்பலமாகி உள்ளது. சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். அதில் அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார் அல்லு சிரிஷ். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். நடிகர் அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தமி...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது....
புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுவை மாநிலத்தில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா நோயாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வரை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 5 ஆயிரத்து 501 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளையும் இணையவழி மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு க...