தளபதி விஜய் பற்றிய “THE ICON OF MILLIONS ” புத்தகம் ரிலீஸ்!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
"THE ICON OF MILLIONS" என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் "கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் " என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்த புத்தகம் நிவாஸ் என்பவரால் எழுதப்பட்டு " THALAPATHY ONLINE FA...









