அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் – கமல்ஹாசன்
அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போயிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் களம் காணுகின்றனர்.
இதனால் தற்போதைய தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் கோவை தெற்கு தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. அனைவரும் உற்றுநோக்கும் தொகுதியாக அது உள்ளது. எனினும் இத்தொகுதி இந்த வேட்பாளர் மூவருக்கும் சவால் மிகுந்த களமாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்நிலையில் பரப்புரை முடித்துவிட்டு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் வேண்டாம் என்று இருந்த நான் எந்த கடத்தில் அரசியலுக்கு வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும். நான் மறுபடியும் சினிமாவில் நடி...









