சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை! யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம் எப்போதாவது நடக்கும். தற்போது வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறினர். 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு யானை இரட்டை குட்டிகளை ஈன்றது. இப்போது வடக்கு கென்யாவில் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது....
மாஸ்க் போட மறுத்த பயணி… விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பிய விமானி!

மாஸ்க் போட மறுத்த பயணி… விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பிய விமானி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மாஸ்க் போட மறுத்த பயணி... விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பிய விமானி! அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணித்த ஒரு பயணி, முக கவசம் அணிய மறுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என விமான பணியாளர்கள் எடுத்துக் கூறியும் அந்தப் பயணி கேட்கவில்லை. பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால், விமானி உடனடியாக விமானத்தை மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார். மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி பெற்றார். விமானம் தரையிறங்கியதும், முக கவசம் அணிய மறுத்த பயணியை போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது பயண அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட...
தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்!

தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்! ஈராக் நட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே மலைப் பகுதியில் உள்ள முகாமில் ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  கண்மூடித்தனமாக பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில், 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தியாலா மாகாணம், பாகுபாவின் வடக்கே அல்-அசிம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாக்தாத்திற்கு வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதல், சமீபத்திய மாதங்களில் ஈராக் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் ஆகும்....
‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை பார்த்துவிட்டு, தாங்களும் குற்ற உலகில் பிரபலம் அடைய வேண்டும் என கருதி 3 சிறுவர்கள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஜகாங்கீர்புரி பகுதி மருத்துவமனையில் ஷிபு என்ற நபர் கத்தி குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஷிபுவை கத்தியால் குத்தியது சிசிடிவி காணொளி மூலம் தெரிய வந்தது. அந்த சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாங்கள் புஷ்பா உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களை போல ஆக வேண்டும் என விரும்பியதாகவும், இதனால் ஒருவரை கொலை செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் அடைய இருந்ததாகவும் தெரி...
பிரபல நடிகை வீட்டில் துணிகளை திருடிய தனுஷ்!

பிரபல நடிகை வீட்டில் துணிகளை திருடிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் டார்லிங், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினியாக நடித்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப் பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும். கடந்த ஜனவரி 11ஆம் திகதி தனுஷ், சில பொருள்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   அதன்பிறகு வீட்டில் சோதனை நடத்திய பிறகு விலை உயர்ந்த கேமரா, 40 ஆயிரம் ரூபாய் உள்பட சில பொருள்கள் காணவில்லை. எனவே தனுஷிடம் விசாரணை நடத்தி திருட்டுப்போன பொருள், பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேல...
தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1956-ம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது இதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-ல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்ப தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது...
குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

helth tips, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை. 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும். * கொரோனா, ஒரு வைரஸ் தொற்று ஆகும். தீவிரமற்ற கொரோனா தொற்றை சமாளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (ஆன்டிமைக்ரோபியல்) எந்தப் பங்கும் இல்லை. எனவே அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய்த்...
இனி மாஸ்க் அணிய வேண்டாம் -இங்கிலாந்து அரசு

இனி மாஸ்க் அணிய வேண்டாம் -இங்கிலாந்து அரசு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள்
    இங்கிலாந்து மக்கள் அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் அங்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மக்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையில்லை, இரவு நேர விடுதிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவசியமாக்கப்பட்டிருந்த கோவிட் பாஸ்கள் இனி தேவையில்லை, அதே ...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம். இந்த பரிசு தொகை குடுப்பது ஆஸ்திரியாவில். ஆஸ்திரியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 72 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரியா குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரிய அரசு பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆஸ்திரியாவில் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் ஆஸ்திரியா அரசாங்கம் மற்றுமொரு ஊரடங்கைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் இனிமேல் தடுப்பூசி செலுத்துபவரா...
காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... ஆனால் பாவம் இவருக்கோ காதலால் கிட்னி இல்லாமல் போய்விட்டது.   அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் நாட்டின் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்னை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார். ஒருகட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை  அறிந்து தனது கிட்னியை  தானமாகக் கொடுத்துள்ளார். ஆனால் காதலி  கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் காதலை  பிரேக் செய்து கொண்டுள்ளார்.மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன உசீல் டிக்டாக்கில் புலம்பி வருகிறார். இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், "எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் ...