ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அமெரிக்காவில் மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்!

அமெரிக்காவில் மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்! மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார். 1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறியதாவது:- தொலைபேசி மூலம் ஏலம் முடி...
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் வழிவகை செய்யும் பொருட்டு தற்போது, தொழில்மனைகளின் விலையை குறைத்து ...
உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்! உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு வாரம் ஒருமுறை செல்லும் வகையில் பயண திட்டங்களை அமைத்துள்ளார். புதிய திட்டங்களை அறிவிப்பதோடு நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து மக்களை கவர்ந்து வருகிறார். அந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார். கோரக்பூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் 3 மெகா திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அந்த 3 திட்டங்களும் 9 ஆயிரத்து 500 கோடி மதிப்புடையது. கோரக்பூர் மேம்பாட்டு திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 திட்டங்களில் உரத் தொழிற்சாலை திட்டம் ரூ.8 ஆயிரத்து 603 கோடி செலவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உரத் தொழிற்சாலை மூலம் கோரக்பூர் மாவட்ட...
டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது! இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில்...
நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு!

நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு! நாகாலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தும்போது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று பின்னர் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த கூலித் தொழிலாளர்கள். இவர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வேனில் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அப்போது இவர்கள் ஊருக்கு...
மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்!

மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்! காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார். சாணிக் காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். அடுத்ததாக திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது....
தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு!

தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு! சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. பல லட்சம் உயிர்களை பலி வாங்கியதோடு, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் வேகமாக பரவிய இந்த தொற்று மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகளும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் புதியதாக மரபணு உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வடிவில் உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் கர்நாடகத்தில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒமிக்ரான் பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இங்கிலாந்து, ...
மணிப்பூரில் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் சிக்கியது!

மணிப்பூரில் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் சிக்கியது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மணிப்பூரில் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் சிக்கியது! மணிப்பூர் மாநிலம் காங் போகிடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நாசவேலை கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் பாதுகாப்பு படையினர் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து அந்த கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது பயங்கர ஆயுதங்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்ததும் ஆயுதங்களுடன் இருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்....
அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்!

அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்! வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.  இது, இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும், மண்டலமாக மாறிய பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் 'ஜாவத்' புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி அன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா! மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய சரத்பவார்,  வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆலோசித்ததாகவும் வலிமையான ஒரு மாற்றுத் தலைமை தேவை குறித்து விவாதித்ததாகவும் கூறினார். மம்தா பானர்ஜியுடனான விவாதம் தங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆளும் கூட்டணிக்கு மாற்றாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து கொண்ட கூட்டுத்தலைமை அமைய வேண்டும் என்...