கொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி – நாசர், பூச்சி முருகன் கோரிக்கை
கொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி
அமைச்சரிடம் நாசர், பூச்சி எஸ். முருகன் கோரிக்கை
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி எஸ். முருகன் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகளுமான நாசர் மற்றும் ராஜேஷ் அவர்களுடன் இன்று செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன் அவர்களை
சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்து விளக்கி அவர்களுக்காக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது,
'அன்புடையீர் வணக்கம்,
1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எம்.ஜி.ஆர்.,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் என பெரும் மேதைகளால் வளர்க்கப்பட்டது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். பெரும் சட்ட போராட்டத்தின் வி...









