வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

NEWS

மகேஷ்பாபுவுக்கு வரவேற்பு முருகதாசுக்கு வேண்டுகோள் ஸ்பைடர் பாடல் விழாவில் விஷால் பேச்சு

மகேஷ்பாபுவுக்கு வரவேற்பு முருகதாசுக்கு வேண்டுகோள் ஸ்பைடர் பாடல் விழாவில் விஷால் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்'. என்விஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா அரங்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள் மகேஷ்பாபுவின் ரசிகர்கள். நான் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறேன். முதல் நாள் தான் ஒரு ஹாலிவுட் நடிகரை பார்த்த மாதிரி இருந்தது. இரண்டாவது நாளில் இருந்தே சகஜமாக தமிழில் என்னுடன் பேச தொடங்கி விட்டார். சமூக அக்கறை உடைய படங்களை எப்போதும் கொடுத்து வரும் முருகதாஸ் சார் நீங்க...
அரசியல் கள பாடலால் விஷால் உற்சாகம்..!

அரசியல் கள பாடலால் விஷால் உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
விஷாலை உற்சாகப்படுத்திய "தலைவன் வருகிறான்"-“விஷால் ஆன்தம்”! விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது. “நேசம் கொண்ட தலைவன் வந்தான், நெஞ்சே நிமிர்ந்து நில்லு, நெருப்பைப் போல தீமை எரிக்கும் நேர்மை இவன்தான் சொல்லு வீரம் பாதி ஈரம் பாதி வெல்லும் எங்கள் விஷால் நீதி…” என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தே...
வீட்டு வசதி வாரிய டெண்டரில் முறைகேடு..??? மவுனம் காக்கும் அரசு

வீட்டு வசதி வாரிய டெண்டரில் முறைகேடு..??? மவுனம் காக்கும் அரசு

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம்” என்று பாடிய புரட்சித்தலைவரின் வரிகளுக்கு உயிர் கொடுத்து, சொந்த வீடு வேண்டும் என்று கனவு காணும் தமிழக மக்களின் ஆசைக் கனவுகளை ஈடேற்றி, அனைவருக்கும் வீடு” என்னும் குறிக்கோளை நிறைவேற்றிட, ஜெயலலிதா, தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிப்பதையும், தமிழ்நாட்டை குடிசைப் பகுதிகள் அற்ற மாநிலமாக மாற்றுவதையும், தனது இலட்சிய நோக்காக பிரகடனப்படுத்தினார். ஜெயலலிதாவின் இந்த உயரிய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு சீர்திருத்தங்களையும், கட்டுமானத் தொழில் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது.   மேலும் அகில இந்திய அளவில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மிக அதிக அளவிலான வீட்டுவசதி அலகுகள் ஒப்புதல் பெறப்பட்டு, மேலு...
தொழில்பண்பு இல்லாதவரா ஸ்ருதிஹாசன்..!  வம்புக்கு இழுத்த குஷ்பு..!

தொழில்பண்பு இல்லாதவரா ஸ்ருதிஹாசன்..! வம்புக்கு இழுத்த குஷ்பு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
    சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டு மெகா ஹிட் ஆன படம் பாகுபலி. அதன் வெற்றியால் இந்தியா முழுவதும் சரித்திர பின்னணி படங்களுக்கு ஏக மவுசு ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாகத்தான் சுந்தர்.சி.இயக்கத்தில் தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘சங்கமித்ரா’ என்ற பட அறிவிப்பு வெளியானது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இதற்கான ஆரம்ப விழாவை நடத்தினார்கள். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு, பட ஆரம்ப விழா நடந்த கேன்ஸ்வரை ஸ்ருதியும் சென்றிருந்தார். இதற்கிடையில் திடீரென சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டார் என கூறப்பட்டது. பட வேலைகள் எதுவும் தொடங்காதபோது இதுபோன்ற செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராததால் திரையுலகினரும் அவரவர் வேலையை பார்த்தனர். சமீபத்தில் சென்னை வந்திருந்த ஸ்ருதிஹசன் பலமுறை செய்தியாளர்களை சந்தித்...
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால்  பிரதமருக்கு சத்யராஜ் மகள் கடிதம்..!

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பிரதமருக்கு சத்யராஜ் மகள் கடிதம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தந்தையை போலவே, தமிழ் மீது அதீத ஈடுபாடு உடைய திவ்யா, சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச சிறப்பு மருத்துவ நேர்க்காணல் ஒன்றை நடத்தியிருந்தார். கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே. இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, "அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெர...
ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்

ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநில சட்டசபையில் தனி வாக்குசாவடி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக சென்னை கோட்டையில் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடி அறைக்கு வெளியில் எப்படி வாக்களிப்பது என்ற விபரம் நோட்டிசாக ஒட்டப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பத...
100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய மற்றும் இந்திய சாதனை புரிந்த 68 வயது “ஜகத் தர்கஸ்”

100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய மற்றும் இந்திய சாதனை புரிந்த 68 வயது “ஜகத் தர்கஸ்”

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜகத் தர்கஸ் 68 வயது நிரம்பிய இவர் சிறு வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொழுதுபோக்கை துறந்தார். இவர் முகமது . ரஃபி சாப் பாடல்களை அதிகமாக விரும்பியவர்.  பாடல்களை பாடுவதை விட அதனை விசில் மூலம் அதனை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.  விசில் அடிப்பதில் தன்னை மிகவும் வலிமை படுத்திக்கொண்டார் . "WIND MAGIC"- அதாவது காற்று மந்திரம் புரிவதில் இவர் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். மேலும் இவர் சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த " WIND MAGIC " மூலம் பல விருதுகளை பெற்றுள்ளார். 9.7.2017 அன்று இவர் 120 முகமது .ரஃபி சாப் படலாகளுக்கு விசில் மூலம் இசை எழுப்பி ஆசிய மற்றும் இந்திய சாதனையை நிகழ்த்தினார். இந்த விழா  அரும்பாக்கத்தில் உள்ள" டாக்டர். ஜி.வைஷ்ணவ கல்லூரி" அரங்கதில் நடைபெற்றது. இவர் 120 பாடல்களுக்கு 10 மணி நேரத்தில் விசில் மூலம் இசை எழுப்பி "திரும...
நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் – கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!

நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் – கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் - கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..! சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர்  லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபகரணங்களை வழங்கினார்கள். சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரத்தில் சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனத்தலைவர் லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழா சாய்ராம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து, இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலை...
தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசுடன் போராடி கோரிக்கையில் வெற்றி பெற முடியாத திரையரங்க உரிமையாளர்கள், இப்போது திரையரங்க நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கதாகும். கேளிக்கை வரி குறித்து முடிவெடுப்பதற்காக இரு தரப்பு பிரதி நிதிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். இந்தக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுக்கள் அடுத்த சில நாட்களில் முடிவடைய வாய்ப்பிருக்கிறது. ...
ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!

ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல் பம்ப்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை ஏற்படுத்தாத பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, ஜூலை, 12ம் தேதி பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இது குறித்து அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யப்படும் என்ற முடிவுக்கு நாங்கள் துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இதில் வெளிப்படைதன்மை இல்லை என்பது எங்களின் எண்ணமாக உள்ளது.மேலும், தானியங்கி தொழில்நுட்ப வசதி, 100 சதவீத பெட்ரோல் பங்க்குகளிலும் பொருத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன. அதை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, ஜூலை, 5ம் தேதி பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதில்லை என்றும், ஜூலை, 12ம் தேதி நாடு முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் முடிவு செய்துள்ளோம்....