சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வழக்கம், இந்திய மக்களிடையே பெருகி வருகிறது!

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வழக்கம், இந்திய மக்களிடையே பெருகி வருகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி பதில் பெற்றுள்ளார். அந்த பதிலில் ரெயில்வே தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:- * 2021-22 நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சம் ஆகும். இவர்கள் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்களுடன் பயணித்ததும் தெரிய வந்தது. * உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்த இவர்களிடம் ரூ.1,017 கோடியே 48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. * கொரோனா காலத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தபோது இத்தகைய பயணிகளின் எண்ணிக்கை 27 லட்சம். * இப்பொழுதும் ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது, கொரோனா கால கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், விரைவு மற...
வேட்பாளர் சின்னத்தில் குளறுபடி: ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் மறுவாக்குப்பதிவு!

வேட்பாளர் சின்னத்தில் குளறுபடி: ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் மறுவாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு மொத்தம் 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தமுள்ள 28,042 வாக்காளர்களில் 21,435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 76.44 சதவீதமாகும். இந்தநிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கை சின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டை இலை சின்னத்திலும், பா.ம.க. வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும் போட்டி...
கர்நாடகாவின் நந்தி மலையில் சிக்கி தவித்த மாணவர் மீட்பு!

கர்நாடகாவின் நந்தி மலையில் சிக்கி தவித்த மாணவர் மீட்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நந்தி ஹில்ஸ்: கர்நாடகாவின் நந்தி மலையில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த  நிஷாங்க் என்ற மாணவன், எதிர்பாராத விதமாக 300 அடிக்கு கீழே விழுந்து பிரம்மகிரி பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிக்பல்லப்பூர் மாவட்ட ஆட்சியர், மீட்பு நடவடிக்கை தொடர்பாக யெலஹங்கா பகுதி விமானப்படையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விமானப்படை  ஹெலிகாப்டர் மூலம் அந்த மாணவரை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிக்கபள்ளாபூர் பகுதி போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பாறை இடுக்கில் அசைய முடியாமல் சிக்கியிருந்த நிஷாங்கை கண்டு பிடித்த விமான படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். விமானப்படைய சேரந்த மருத்துவ உதவியாளர் அந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்....
உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார் உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே பைடனும், விளாடிமிர் புதினும் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்...
சூடு சுரணை இருக்கா… சம்பாதித்து சொத்து சேர்த்தது போதாதா? செல்வமணியை காய்ச்சி எடுத்த பாக்யராஜ்!

சூடு சுரணை இருக்கா… சம்பாதித்து சொத்து சேர்த்தது போதாதா? செல்வமணியை காய்ச்சி எடுத்த பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நீ எடுத்த படம் எல்லாம் நல்லா ஓடிச்சுன்னு சொன்னாங்க அது எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என  ஆர்.கே.செல்வமணியை, இயக்குநர் கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார். தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை ஆனால் நான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் நான் வெற்றிபெற்றால் இயக்குனர்கள் எந்த பிரச்சனை என்றாலும் என்னை அழைக்கலாம் என இமயம் அணி தலைவர் வேட்பாளர் கே.பாக்யராஜ் பேசினார். வரும் 27ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிட உள்ளது . தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இயக்குன...
கள்ளன் பட விவகாரம்!

கள்ளன் பட விவகாரம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை போன்ற பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பயணித்து வருகிறார். கரு.பழனியப்பன் அடுத்து கதாநாயகனாக ”கள்ளன்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை  பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இதில் நிகிதா, வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன் போன்ற பலர் நடித்துள்ளனர். கள்ளன் படத்தின் டைட்டிலுக்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் ‘கள்ளன்’ படத்தின் தலைப்பை மாற்றாமல் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்...
ஐரோப்பாவை அச்சுறுத்திய யூனிஸ் புயல் – 13 பேர் பலி!

ஐரோப்பாவை அச்சுறுத்திய யூனிஸ் புயல் – 13 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இங்கிலாந்தில் உருவான யூனிஸ் புயல் தாக்கத்தால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. யூனிஸ் புயல் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. யூனிஸ் புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. யூனிஸ் புயலால் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், யூனிஸ் புயலால் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தி...
மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு!

மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல்  நடைபெறுகிறது. இதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டுவேட்டையாடி வருகின்றனர். ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் சஞ்சோய்சிட் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தந்தை சம்ஜய்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. வேட்பாளர் சஞ்சோய்சிட் கடந்த மாதம்தான் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்தார். இதனால் தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த ச...
உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்!

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று  ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 1,500 போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் டொனெட்ஸ்கில் பகுதியில் 591 மீறல்களும், லுகான்ஸ்கில் 975 மீறல்களும் பதிவாகி உள்ளன. இது கடந்த எட்டு ஆண்டுகாலமாக தொடரும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் இது அதிகபட்சமாக கருதப்படுகிறது. உக்ரைனின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற பகுதி அருகே சில நூறு மீட்டர் தூரத்தில் மோட்டார் குண்டுகள் விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது....
பஞ்சாப் தேர்தல் – காலை 9 மணி வரை 4.80 சதவீத வாக்குகள் பதிவு!

பஞ்சாப் தேர்தல் – காலை 9 மணி வரை 4.80 சதவீத வாக்குகள் பதிவு!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங், ஜலந்தரின் மிதாபூரில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். மற்றொரு அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு,  லூதியானா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், மொஹாலியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி லூதியானாவில் உள்ள வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.  காலை 9 மணி நிலவரப்படி  பஞ்சாப்பில்  4.80 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை   8.15 சதவீத வாக்குகள் பதிவாகின. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் அபய் ராம் யாதவ் சைஃபாய் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ...