சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

விஷாலை கட்டுக்குள் வைத்திருக்கும் 2 நடிகர்கள்- பார்த்திபன் ஓப்பன் டாக்

விஷாலை கட்டுக்குள் வைத்திருக்கும் 2 நடிகர்கள்- பார்த்திபன் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இளையராஜா 75’ நிகழ்ச்சியின் முதுகெலும்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் தனது தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் பார்த்திபன். அத்தோடு நில்லாமல் ராஜாவின் இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். பார்த்திபனின் செயலில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு, விஷால் அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும் அவரது இருட்டடிப்பில் இருந்த உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வராமல் இருந்த நிலையில் தனது தரப்பு குறித்து விரிவான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் பார்த்திபன். ’’நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். ‘பலூன் பறக்க காற்று எப்பட...
நாட்டுக்கு அவசியமான படம் “கடைசி எச்சரிக்கை” பட ட்ரைலரை வெளியிட்டு சீமான் வாழ்த்து..!

நாட்டுக்கு அவசியமான படம் “கடைசி எச்சரிக்கை” பட ட்ரைலரை வெளியிட்டு சீமான் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
'இன்னைக்கு உண்மையிலேயே நாட்டுக்கு அவசியமான படம் கடைசி எச்சரிக்கை…!' - ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திய சீமான்! கடைசி எச்சரிக்கை படத்தின் ட்ரைலரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான். சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை. பேருக்கு தான் இது குறும்படமே தவிர ஒரு முழு நீள படத்திற்கான அம்சங்களுடன், நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு படம் இது. படத்தை பார்த்த திரையுலக பிரமுகர்கள் அனைவருமே வெகுவாக பாராட்டினர். டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். https://youtu.be/wy35wI_Er8Q படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் பாடலை இசையமைப்பா...
தமிழக அரசு நினைத்தால் ஒரு நாளில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை முடக்க முடியும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் விஷால் பேட்டி

தமிழக அரசு நினைத்தால் ஒரு நாளில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை முடக்க முடியும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் விஷால் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் வைத்ததாக கூறினார். பார்த்திபன் விலகல் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ஏ.ஆர்.ரஹுமானையும், இளையராஜாவையும் ஒரே மேடையில் நிறுத்தியது பார்த்திபன் தான் எனவும், நிகழ்வுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர்களின் விருப்பம் எனவும் தெரிவித்தார். ...
மகள் திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு

மகள் திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதையடுத்து சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபரின் மகனும் நடிகருமான விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கல்யாணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை E3 கா...
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு..!

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவே இல்லை. வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்சவரம்பான ரூ.2.5 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து 5 லட்ச...
என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வாக்களிப்பது மட்டுமே எனது அரசியல் கடமை தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களைப் பற்றி வசைபாடுவதை தான் என்றுமே ஆதரித்ததில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ”நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரைப்படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌ அறித்ததே. என்னுடைய தொழில்‌ சினிமாவில்‌ நடிப்பது மட்டுமே என்பதை நான்‌ தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்‌. சில வருடங்களுக்கு முன்னர்‌ என்‌ ரசிகர்‌ இயக்கங்களை நான்‌ கலைத்ததும்...
கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுத்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் – முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா

கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுத்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் – முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து சிறை துறை டி.ஐ.ஜி. ஆக இருந்த ரூபாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அறிய சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 2 முறை தகவல் அறியும் சட்டத்தில் அறிக்கை குறித்து கேட்டபோதெல்லாம் பதில் தர மறுக்கப்பட்டது. பின்னர் 3-வது முறையாக மேல் முறையீட்டுக்கு சென்று அறிக்கையை பெற்றேன். அந்த அறிக்கை எனக்கு ஒருவித திருப்தியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது. சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது...
தம்பிதுரைக்கு முதல்வர் ஆசை இருந்தது – TTV தினகரன்

தம்பிதுரைக்கு முதல்வர் ஆசை இருந்தது – TTV தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது. திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங...
மார்ச் முதல் வாரத்தில் MP தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்..!

மார்ச் முதல் வாரத்தில் MP தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதற்கான ஆயத்த வேலைகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றும் நோக்கில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் ...
MP தேர்தல் – கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு..!

MP தேர்தல் – கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். https://twitter.com/arivalayam/status/1086990534718058496 திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 8 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ராமசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்...