தமிழ் திரையில் 40 ஆண்டு வாழ்க்கையை நிறைவு செய்த ‘விஜயகாந்த்’-க்கு விழா!
நூறாண்டு கடந்த நம் நம் தமிழ் திரைப்படத் துறையில் தனது 40 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்துள்ள நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த்-க்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது.
தமிழ் திரையின் மூத்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரு மான விஜயகாந்த் தனது 40 ஆண்டு கால சினிமா பயணத்தை நிறைவு செய்கிறார். அதனைக் கொண்டாடும் விதமாக சென்னையை அடுத்த கரசங்கள் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் பல அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் ,'எனது அன்பான சகோதரர் விஜயகாந்த் அவர்களை வெறுக்கிறவர்கள் கூட ஒரு கட்டத்தில் நேசிப்பார்கள்'. இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
...









