காச நோயாளிகள் குறித்த தகவல் தெரிவிக்காத டாக்டர்களுக்கு சிறை!
காச நோயாளிகள் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காச நோய் (டிபி) என்பது தோற்று நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஒரு காச நோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். உலகக் காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரலாம்.
இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அ...









