தன்னம்பிக்கையின் நாயகனாக விளங்கிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார். நரம்பியல் சார்ந்த ALS பாதிப்புக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டிற்கு மேல் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்று பொதுவாக மருத்துவம் கூறிவரும் போதிலும், தனது 21 வயதில் ALS பாதிப்பிற்கு உள்ளாகிய ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகளுக்கும் அதிகம் உயிருடன் இருந்துவரும் அதிசய மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் ஸ்டீபன் ஹாக்கிங் அவர் செய்த சாதனைகள் என்ன?
இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தனர்.
இவ...









