ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை-புறநகர் பகுதியில் 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. தெற்கு வங்கக்கடல் மத்தியில் இருந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 29 முதல் 31-ந் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. குறைந்...
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு திட்டம்! சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார். நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டினர். மேலும் இந...
ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்! மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது ச...
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு- மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு- மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு- மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை! தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் வரை மழை கிடைக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதே நிலையில் இந்த ஆண்டும் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா, நிவர் உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணியும் நடைபெற்று...
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்! திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங...
ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்!

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்! 94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’  மற்றும் தமிழில் 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன. இதில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’  திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூழாங்கல் படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படம், இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்பத...
தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது....
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கு...
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி!

படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி! ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பி...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் 9,488.70 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்....