சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்!

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்! பழனி முருகன் கோவிலில் வருகிற 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் தரிசன தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. எனினும் பழனியில் தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பக்தர்கள் ஒருவழி பாதையில் மலைக்கோவிலுக்கு செல்லும் குடமுழுக்கு அரங்கு பகுதிகளில் நிழற்பந்தல் போடும் பணி நடக்கிறது. இதேபோல் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது....
குறைந்த விலை 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்!

குறைந்த விலை 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குறைந்த விலை 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்! ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 3 மாடல் வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள், புதிய ஐபோன் எஸ்.இ. 3 மாடலை இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய 27 இன்ச் ஐமேக், எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் கொண்ட டாப் எண்ட் மேக் மினி மாடல்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 3 மாடலில் ஏ14 அல்லது ஏ15 பயோனிக் சிப்செட் மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தோற்றம் முந்தைய ஐபோன் எஸ்.இ. 2 போன்றே காட்சியளிக்கும். மேலும் டச் ஐ.டி. சென்சார் ஹோம் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும...
நாடு முழுவதும் இன்று முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

நாடு முழுவதும் இன்று முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசும் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் அளவு 151.57 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக 2022 ஜனவரி 10 முதல் சுகாதாரப் பாதுகாப்பு,  முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என்று டிசம்பர் 25ந்தேதி அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று  கொரோனா பூஸ்டர் டோஸ், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை தொடங்குகிறது. கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் பெறுவதற்காக மருத்துவரின் சான்றிதழ் அல்லது மருந்துச் சீட்டைச் சமர்ப...
குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு!

குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு! லத்தீன் அமெரிக்கா நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் விக்டர் எஸ்கோபர் (60). நீரிழிவு நோய் மற்றும் இதய கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், உடல்நிலை மோசமடைந்து எப்போதும் வீல் சேரிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டது. மேலும், நுரையீரல் பாதிப்பால் அவருக்கு சுவாசிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதுபோன்ற பல்வேறு நோய்கள் இருந்ததால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அரசிடம் பலமுறை இவர் மனு அளித்தார். ஆனால், அவை  நிராகரிக்கப்பட்டன. இதனால், அவர் கடும் மன வேதனை அடைந்தார். ‘குணப்படுத்த முடியாத நோய் உள்ளவர்களை  கருணை கொலை செய்யலாம்,’ என கடந்த 1997ம் ஆண்டு கொலம்பியா அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், எஸ்கோபருக்கு அப்படிப்பட்ட நோய்  இல்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றார். ...
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம். இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு அடுத்த வாரம் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஐஐடி கான்பூர் கல்வி நிலைய பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி அடுத்த மாதத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது டெல்லியில் பரவல் உச்ச நிலையை அடையும்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். மும்பையை பொருத்தவரையில் ஒருநாள் பாதிப்பு அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ...
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகளில் 22 பேர் கார்களிலேயே உறைந்து உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகளில் 22 பேர் கார்களிலேயே உறைந்து உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகளில் 22 பேர் கார்களிலேயே உறைந்து உயிரிழப்பு! பாகிஸ்தானின் முர்ரே பகுதியில் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது உறைபனி நிலவியதால் சுற்றுலா பயணிகளில் பலர் தங்கள் கார்களிலேயே உறைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றாக முர்ரே பகுதி திகழ்கிறது. தற்போது அங்கு கடும் பனிப்பொழிவு பெய்துவருகிறது. ஆட்களே உறைந்துபோகும் அளவுக்கு உறைபனி நிலவுகிறது. இதனால் அங்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 15 ஆண்டுகளில் இல்லாத அளவு சுற்றுலா பயணிகள் குவிந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது உறைபனி நிலவியதால் சுற்றுல...
இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

HOME SLIDER, kodanki headlines news, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய  5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம். முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராமேசுவரம் கோவிலில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் குவிப்பு. ஊரடங்கு நீட்டிப்பா? - கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 98 பே...
பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து 7 பேர் உயிரிழப்பு

பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து 7 பேர் உயிரிழப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நிர்வீழ்ச்சி பகுதிக்கு  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். மோட்டார் படகுகள் மூலம் அருவி பகுதிக்கு அவர்கள் சென்ற நிலையில், அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை  ஒன்று உடைந்து மூன்று படகுகள் மீது விழுந்தது.  இதில் 7 பேர் உயிரிழந்துனர்.  32 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை என்று மினாஸ் ஜெரைஸ் தீயணைப்புத்துறை அதிகாரி கர்னல் எட்கார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அங்குள்ள பாறை சுவர்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த வீடியோக்காட்சிகள் சமுக வளைதளங்களில் பகிரப்பட்டன. அந்த வீடியோவில் பலர் கற்கள் விழுகின்றன என்று எச்சரிக்கை விடுப்பதும்  மற்ற படகுகளில் இருந்தவர்களை விலகிச் செல்ல...
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் – அமைச்சர் மாசு பளீச் பதில்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் – அமைச்சர் மாசு பளீச் பதில்

HOME SLIDER, NEWS, politics, வீடியோ
  தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்வர் திட்டம் இதுதானாம் - அமைச்சர் மாசு பளீச் பதில்   https://youtu.be/TLXMwJmu9JE