வெள்ளிக்கிழமை, ஜூலை 1
Shadow

இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய  5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம்.

முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ராமேசுவரம் கோவிலில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் குவிப்பு.

ஊரடங்கு நீட்டிப்பா? – கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 98 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் காரணமாக புதுச்சேரியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது. திருச்செந்தூரில் பக்தர்களுக்கான தரிசனம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் பிரவேசத்திற்கு உள்ளூர் பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.

தேர்தல் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் உண்மை விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இன்று முதல் 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா உள்ளிட்ட புதிய வகை பாதிப்புகள் தொடர்ந்து சைப்ரஸ் நாட்டில் டெல்டாக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது.

 

 

216 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது