வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: polimer news

இன்றைய முக்கியச் செய்திகள்  Today Head Lines 08-02-22

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 08-02-22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. மாநில காங்கிரஸ் தலைவராக தாம் தொடர்ந்தால், எந்த எம்எல்ஏக்களின் வாரிசுகளும் துறைத் தலைவர்களாக முடியாது என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் நெஞ்சுவலி காரணமாக அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 மாத பரோலில் வெளிவந்த ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருந்தார். அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் வைத்திருக்கக் கூடாது என்று நா...
இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

HOME SLIDER, kodanki headlines news, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய  5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம். முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராமேசுவரம் கோவிலில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் குவிப்பு. ஊரடங்கு நீட்டிப்பா? - கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 9...
இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

HOME SLIDER, kodanki head line
  * தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் மூடல். தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 117 பேரும் குணமடைந்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 81 மாணவர்களில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சனிக்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருப...