வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 08-02-22

 

நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

மாநில காங்கிரஸ் தலைவராக தாம் தொடர்ந்தால், எந்த எம்எல்ஏக்களின் வாரிசுகளும் துறைத் தலைவர்களாக முடியாது என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் நெஞ்சுவலி காரணமாக அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 மாத பரோலில் வெளிவந்த ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருந்தார்.

அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் வைத்திருக்கக் கூடாது என்று நாகப்பட்டினம் போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின் போது சட்டை மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்கக் கூடாது என்றும், செல்போனை நடத்துனரிடம் ஒப்படைவித்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி தற்போது பரோலில் உள்ள ரவிச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, தனது கணவரான ஆர்.கே.செல்வமணி உடன் சந்தித்தார். தமிழக எல்லைப்பகுதியான நகரி தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்ததாக நடிகை ரோஜா கூறினார்.

தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல், காதலர் தினத்தை ஒட்டி வருகின்ற 14ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் உருவான விதம் தொடர்பாக, சிவகார்த்திகேயேன், அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோருடன், விஜய் செல்போனில் கலந்துரையாடும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாமக தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜி.கே.மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியான நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

181 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன