ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சசிகலாவுக்கு பயந்து ஜெ.நினைவிடத்துக்கு தடை போட்ட எடப்பாடி அரசு! 

சசிகலாவுக்கு பயந்து ஜெ.நினைவிடத்துக்கு தடை போட்ட எடப்பாடி அரசு! 

HOME SLIDER, NEWS, politics
சசிகலாவுக்கு பயந்து ஜெ.நினைவிடத்துக்கு தடை போட்ட எடப்பாடி அரசு! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சுமார் 80 கோடி செலவில் கட்டப்பட்டது. கடந்த 27ம் தேதி அந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதே நேரம் அதே 27ம் தேதி ஜெ.,வின் நெருங்கிய தோழியும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலை ஆனார். அவரின் விடுதலை தமிழகத்தில் குறிப்பாக ஆளும் அதிமுகவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. இந்த சூழலில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா இப்போது பெங்களூர் நகரத்தில் ஓய்வில் இருக்கிறார். அவர் சென்னை வரும் போது மிக பிரமாண்டமான மக்கள் கூட்டத்தோடு வரவேற்க தினகரன் தலைமையிலான அமமுக வேலைகள் செய்து வருகிறது. சசிகலா சென்னை வந்ததும் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டருந்தார்...
கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, கவர்னர் உரையாற்றி வருகிறார்.  கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது...
சங்கருக்கு பிடி வாரண்ட்  இது ஒரு பொய் செய்தி – இயக்குனர் அறிக்கை

சங்கருக்கு பிடி வாரண்ட்  இது ஒரு பொய் செய்தி – இயக்குனர் அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிடி வாரண்ட்  இது ஒரு பொய் செய்தி - இயக்குனர் சங்கர் அறிக்கை சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குனர் சங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. இதற்கு இயக்குனர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமரன், ந...
தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி ஆணிகளை புதைத்து வைத்த போலீசார்

தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி ஆணிகளை புதைத்து வைத்த போலீசார்

HOME SLIDER, NEWS, politics
தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி ஆணிகளை புதைத்து வைத்த போலீசார் டிராக்டர் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதால், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் மூன்று எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசம் - டெல்லி காசிபூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்துவிட வேண்டும் என போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் விவசாயிகள் மீண்டும் குவிந்து வருகின்றனர். இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தடுப்புகள் (barricades) கொண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை வன்முறை வெடித்துவிடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக உள்ளனர். இதனால் தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி போலீசார் ஆணிகளை புதைத்து வைத்துள்ளனர். விவசாயிகள், டிராக்டர்கள் அந்த இடத்தை கடந்த வரமுடியாத அளவிற்கு போலீசார் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்...
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை!

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை!

HOME SLIDER, NEWS, politics
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை! பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இந்த ஆண்டும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வியாக இருந்தது. கடைசியாக, 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில், வருமான வரி செலுத்துவதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோதும், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யவில்லை. மாறாக, வரி சதவீதம் குறைக்கப்பட்டது. இது வரி செலுத்துவோருக்கு ஆறுதலாக அமைந்தது. இந்த ஆண்டு தாக்கல் செய்த ...
எந்திரன் பட கதை திருட்டு  இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட்!

எந்திரன் பட கதை திருட்டு இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள்
  எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் 11 ஆண்டுகளாக இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. கடந்த 10 வருடங்களாக சென்னை உ...
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, திரைப்படங்கள், நடிகைகள்
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில், தான் நடிக்கவுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது 'நான் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் அரசியல் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. ஆனால் அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்திய அரசியலின் முக்கியமான தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது'' ...
மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் 

மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனைக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றும் ஏற்பட்டது. எனவே, விடுதலை தொடர்பான கோப்புகள் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டது. சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சசிகலாவின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீரான நிலையில் இருந்தது. எனவே, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக கொர...
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒன்றிணைவோம் வா,  விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை கூட்டம் ஆகிய தலைப்புகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக புதிய கோணத்தில்  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்வு என்ற வாக்குறுதியுடன் இந்த பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார திட்டத்தை திருவண்ணாமலை தொகுதியில் தொடங்கினார். காலையில் திருவண்ணாமலை தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். ...
பட்ஜெட் கூட்டத்தொடர்… ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

பட்ஜெட் கூட்டத்தொடர்… ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன....