ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடுகளும் இல்லாமல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்...
முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, NEWS
முதுகெலும்பை வலுப்படுத்தும் தண்டாசனம்! உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் அடிப்படை தண்டாசனம் எனப்படும் நிலை. நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டுவதுதான் இந்த ஆசனம். உடல் நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளும் இடுப்புக்குப் பின்னால் இருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். நீட்டியிருக்கும் கால்களின் அடிப்பகுதி, கீழே அழுத்தியிருக்க வேண்டும். இடுப்பு எலும்புகள் கீழே அழுத்தியிருக்க வேண்டும். கைகளை அழுத்தி மார்பை நன்கு விரிவடையச் செய்யுங்கள். முதுகெலும்பை நேராக வைத்திருங்கள். தோள்பட்டைகளும் விரிந்திருக்க வேண்டும். தொடைகள், முழங்கால்கள் தளர்வாக இருக்கக் கூடாது. குதிகால்களை முடிந்தவரை வெளிப்புறமாகத் தள்ளுங்கள். நுனிக் கால்களை முன்னோக்கி இழுங்கள். கால் விரல்கள் உங்களை நோக்கியபடி இருக்கட்டும். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இதே நிலையில் இருக்கல...
மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன!

மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன! கடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் கல்யாணராமன் கூறியதாவது:- இருதய நோய் (மாரடைப்பு) உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. இருதய நோயுடன் வாழும் 520 மில்லியன் மக்களுக்கு கோவிட்-19 கடுமையான இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.. இதனால் இருதய நோய் உள்ளவர்கள் வழக்கமான இருதய பரிசோதனை செய்துகொள்ளாமல் அச்சப்பட்டு வீட்டில் தனிமையாக இருக்கின்றனர். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில்...
சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து- அலறியடித்து ஓடிய பயணிகள்!

சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து- அலறியடித்து ஓடிய பயணிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து- அலறியடித்து ஓடிய பயணிகள்! கோயம்பேடு அருகே இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் என்ஜினியிலிருந்து புகை கிளம்பியது. இதைக்கண்ட டிரைவர் உடனே பயணிகளை அரசு பேருந்தில் இருந்து இறங்க சொன்னார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரிந்தது. டிரைவர் பயணிகளை உடனடியாக பேருந்தில் இருந்து இறங்க சொன்னதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். அரசு பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு  போராட்டத்துக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. விவசாய சங்கங்கள் இணைந்த 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது. முழு அடைப்பு  போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இது தவிர பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், மற்றும் வணிக நி...
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி!

பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்... பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி! அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் பேசினார். குறிப்பாக சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கினார். “ஆப்கானிஸ்தான் பிரதேசம் பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் காக்க வேண்டும். உலகத்திற்கான  பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. எந்தவொ...
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு! அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசிகளை தயார...
கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!   வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணகியையும் அவர் கணவர் தலித் சமூகத்தச் சேர்ந்த முருகேசனையும் துள்ளத் துடிக்க படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், A1-A15 (குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை (இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்) ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவன். மற்றும் A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் ஆய்வாள...
‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்!

‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இதுவரை பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்துள்ள அவர், அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார். இதில் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்திலும், நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் 4 நிமிடம் சென்டிமெண்ட் காட்சி ஒன்று இருப்பதாகவும், அந்தக் காட்சியில் நடிகை கீர்த்தி சுர...
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!

5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில்   ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 23.09.2021: கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேச...