ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு! வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று முன்தினம் கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார...
பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சர்ச்சையில் சிக்கியது!

பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சர்ச்சையில் சிக்கியது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அப்துல் பாருக் உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். https://youtu.be/9A3hhkweDAk 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. இதையடுத்து பள்ளி ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!

தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்! தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதில் உள்ள மும்மொழிக்கொள்கை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. அதேநேரம், தாய்மொழியில் கல்வி கற்கவேண்டும் என கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவ...
30 நாட்கள் பரோல் கேட்டு முதல்-அமைச்சருக்கு நளினி, முருகன் கடிதம்!

30 நாட்கள் பரோல் கேட்டு முதல்-அமைச்சருக்கு நளினி, முருகன் கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
30 நாட்கள் பரோல் கேட்டு முதல்-அமைச்சருக்கு நளினி, முருகன் கடிதம்! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் 29 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, முருகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நளினி, முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்க...
பயிற்சி கொடுக்கும் சாக்கில் உள்ளாடையை இழுக்கும் விளையாட்டு ஆசிரியர் அதிர்ச்சி ரிப்போர்ட் 

பயிற்சி கொடுக்கும் சாக்கில் உள்ளாடையை இழுக்கும் விளையாட்டு ஆசிரியர் அதிர்ச்சி ரிப்போர்ட் 

HOME SLIDER, NEWS, செய்திகள், வீடியோ
  பயிற்சி கொடுக்கும் சாக்கில் உள்ளாடையை இழுக்கும் விளையாட்டு ஆசிரியர் அதிர்ச்சி ரிப்போர்ட்   https://youtu.be/9A3hhkweDAk
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்! காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.  கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன. 18 முதல் ...
நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!

நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது! குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மதியம் தொடங்கிய மழை இரவு வரை கனமழையாக விட்டு விட்டு நீடித்தது. இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நாகர்கோவில் நகரில் பெய்த கன மழையால் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். கனமழையால் மாநகரின் முக்கிய சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் டி.வி.டி. காலனி, செந்தூரா நகர், ரெயில்வே குடியிருப்பு, கம்பளம், ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. சூறைக்காற்றுடன் வீசிய மழையால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக நேசமணி நகர் ...
குழந்தைகளின் பாதுகாப்புக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

குழந்தைகளின் பாதுகாப்புக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குழந்தைகளின் பாதுகாப்புக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு! சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் பெற்றோரின் குழந்தைகள், உணவு மற்றும் உறைவிடம் தேவைப்படும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூர்த்தி செய்ய குழந்தைகள் நலக் குழுவை தொடர்பு கொள்ளலாம். இதுபோன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை கண்டால், மாவட்ட கலெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரியநாராயண சாலை, ராயபுரம், சென்னை-13 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், [email protected] எ...
பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்!

பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்! கொரோனா தொற்று பரவலை அடுத்து மக்கள் அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள கைகளை கழுவுவதற்கு சோப்பு, கிருமி நாசினிக்கு பதிலாக பூசக்காய் என்ற பொருளை பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ளது புதுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கிருமி நாசினிக்கு பதிலாக வனப்பகுதியில் கிடைக்கும் அரிய வகை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த மக்கள் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசக்காய்களை சேகரித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி பயன்படுத்தி வரு...
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 கோடியை தாண்டியது!

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 கோடியை தாண்டியது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15 கோடியை தாண்டியது! சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.85 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.49 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக உள்ளோரின் நிலைமை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது....