பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கிறிஸ் லின், ஷுப்மான் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கில் 7 ரன் எடுத்த நிலையிலும், கிறிஸ் லின் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ராபின் உத்தப்பா உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் இடம் இருந்து போட்டியை தங்கள் பக்கம் இழுத்தது.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உத்தப்பா அவுட...









