ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை!

உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லியில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா இந்த புகாரை அளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மத்திய உள்துறை மந்திரி 'அமித் அனில் சந்திர ஷா’வை காணவில்லை என்று டெல்லி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். தான் பதிவு செய்துள்ள புகாரில் நாகேஷ் கரியப்பா கூறுகையில், மக்களை கவனித்துக்கொள்ள அர...
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர்  அணிய தேவையில்லை! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம...
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த சட்டமன்ற கட்சிகள் தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமையகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்குவதற்கு முன், முக ஸ்டாலின் முன்னுரை வழங்கினார். அப்போது. கொரோனா முழு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல், கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்துவது, அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் இடம் பெறும் வகையில் ஆலோசனைக் குழு அமைத்தல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...
அசாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு!

அசாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டத்திற்கு உட்பட்ட கதியாடோலி காட்டுப்பகுதியில் இன்று காலை 18 யானைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்தது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்குள்ள சூழ்நிலையை பார்க்கும்போது மின்னல் தாக்கி 18 யானைளும் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், யானைகள் இறந்ததற்கான உண்மையான காரணம் குறித்து வனத்துறையினர் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை ....
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு!

கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு! இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வருவதால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதிநேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் வைரஸ் பாதிப்பு சற்றுதான் குறைந்து இருக்கிறது. கொரோனாவை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 10 சதவீதம் ம...
பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும்தான் பிரிட்டனில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாம்!

பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும்தான் பிரிட்டனில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும்தான் பிரிட்டனில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாம்! கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில், கடந்த 14மாதங்களில் முதல்முறையாக தினசரி கொரோனா பாதிப்பில் ஒரு நபர் கூட உயிரிழக்கவில்லை. இதேபோல பிரிட்டனில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எப்படி இது சாத்தியமானது என தெரிந்துகொள்வோம். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்த போது, அதனை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது பிரிட்டன். கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, 70% வேகமாக வைரஸ் தொற்றை பரப்புகிறது என அறிந்ததும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார். நாட்டின் பொ...
திமுக அறக்கட்டளை சார்பில் கொரோனா பொது நிவாரண நிதி ரூ.1 கோடி!

திமுக அறக்கட்டளை சார்பில் கொரோனா பொது நிவாரண நிதி ரூ.1 கோடி!

HOME SLIDER, NEWS, politics
திமுக அறக்கட்டளை சார்பில் கொரோனா பொது நிவாரண நிதி ரூ.1 கோடி! கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார் இந்தநிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது....
நிறவெறி சர்ச்சை… 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்!

நிறவெறி சர்ச்சை… 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நிறவெறி சர்ச்சை... 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்! திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு மூலம் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பில் 90 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த 19 வருடங்களாக இந்த அமைப்பில் கருப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை என்றும் வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட துறையினர் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இந்த சர்ச்சையை தொடர்ந்து பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க...
சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம்

HOME SLIDER, NEWS, politics
சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் - எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு, சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பல்வேறு துறைகளுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவை காணொலி காட்சி மூலம் கூட்ட வேண்டும் என இரு அவை சபாநாயகர்களுக்கும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. அதில் ‘‘சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கு ஒதுக்கிய நிதியை ஆக்சிஜன், தடுப்பூசிகளுக்கு ஒதுக்க வேண்டும். நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் வகையில் மையங்கள் அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் வேலையிழந்தவர்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழ...
கொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி – நாசர், பூச்சி முருகன் கோரிக்கை

கொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி – நாசர், பூச்சி முருகன் கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
கொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி அமைச்சரிடம் நாசர், பூச்சி எஸ். முருகன் கோரிக்கை   தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி எஸ். முருகன் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகளுமான நாசர் மற்றும் ராஜேஷ் அவர்களுடன் இன்று செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்து விளக்கி அவர்களுக்காக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது, 'அன்புடையீர் வணக்கம், 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எம்.ஜி.ஆர்.,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் என பெரும் மேதைகளால் வளர்க்கப்பட்டது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். பெரும் சட்ட போராட்டத்தின் வி...