ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

வேளாண் மசோதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாஜகவினரை விரட்டிய தஞ்சை மக்கள்

வேளாண் மசோதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாஜகவினரை விரட்டிய தஞ்சை மக்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜாகாவினரை தஞ்சாவூர் மக்கள் விரட்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசயிகள் 25 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பாஜாகாவினர் இந்த புதிய சட்டம் குறித்து விளக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருன்றனர். அதேபோல் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனையிலும் பாஜகவினர் வேளாண் சட்ட விளக்கம் மற்றும் ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தபோது பெரிய பேட்டை பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் பாஜகவினர் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை வாங்கி கிழித்து போட்டு, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி திரும்ப செல்லுமாறு கூறியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் உண்டானது. மேலும் இளைஞர்களுக்கு ஆதரவ...
சென்னைக்கு வந்த மு.க அழகிரி!

சென்னைக்கு வந்த மு.க அழகிரி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, சென்னையில் முகாமிட்டு புதுக்கட்சி துவக்கி, நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அழகிரியை, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், இதனை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என தெரிகிறது. சென்னை அறிவாலயத்தில், நேற்று மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின், முதன்மை செயலர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா?’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.   அதற்கு, ‘கட்சி தலைமை முடிவு செய்யும்’ என்றார் நேரு. இந்நிலையில், அழகிரி நேற்று மதுரையில் இருந்து, சென்னைக்கு காரில் வந்தடைந்தார். ஒரு வாரம் சென்னையில் தங்குகிறார். இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் தெரிவிக்கும் போது தி.மு.க.,வில் இ...
தியேட்டர்களுக்கு 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து – ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு

தியேட்டர்களுக்கு 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து – ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக  ரத்து செய்யப்படுவதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்....
ஸ்டெர்லைட் போராட்டம்- ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

ஸ்டெர்லைட் போராட்டம்- ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 23 கட்டங்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், 24வதுகட்ட விசாரணை தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகை முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விசாரணை ஜனவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர்  ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதற்கு முன்பு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாதது...
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி!

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஒரு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்....
கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை – தமிழக அரசு

கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை – தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை - தமிழக அரசு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால் கொரோனா அதிகரிக்கக்கூடும் என கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழலில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது....
மோடி அரசுக்கு ஆதரவாக பேஸ் புக்!

மோடி அரசுக்கு ஆதரவாக பேஸ் புக்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர், 'கிஸான் மோர்ச்சா' என்ற முகநூல் பக்கத்தை துவங்கியுள்ளனர்.இந்த பக்கம் ஆரம்பித்த 5 நாட்களில் 75,000 க்கு அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றது.இதில் போராட்டங்கள் பற்றிய வீடியோக்கள் ,புகைப்படங்கள்,செய்திகளை பதிவிட்டுவந்தனர்.இந்த பக்கத்தை முகநூல் நிறுவனம் தீடிரென நீக்கியது . இது மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தான் பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மூன்று மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் வந்துடுச்சு...
கமல் அறிவித்த 7 அம்ச திட்டம்!

கமல் அறிவித்த 7 அம்ச திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இல்லத்தரசிகள் அனைவருக்கும் அரசு ஊதியம் உள்ளிட்ட 7 அம்சத் திட்டத்தை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்றும், கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். காஞ்சிபுரம் தேரடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலுக்கு, குமரக்கோட்டம் முருகன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால் கமல் அதை ஏற்க மறுத்து விட்டு சால்வை மட்டும் அணிந்து கொண்டார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற கமல், பிள்ளையார் பாளையம், கீழ் அம்பி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு சென்றார்....
காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை தொடங்கும் ஸ்டாலின்!

காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை தொடங்கும் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வரும் 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் *குன்னம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் * நாளை மறுநாள் முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த திட்டம்
நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. ஒரு அதிமுக அமைச்சர் கூட தேர்தலில் ஜெயிக்கக்கூடாது- ஸ்டாலின்

நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. ஒரு அதிமுக அமைச்சர் கூட தேர்தலில் ஜெயிக்கக்கூடாது- ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. ஒரு அதிமுக அமைச்சர் கூட தேர்தலில் ஜெயிக்கக்கூடாது.. ஸ்டாலின் மும்முனை தாக்குதல்களில் நாம் மாட்டிக் கொண்டாலும் நாம் 6வது முறையாக வெற்றிபெற வேண்டும். அர்ஜூனன் வைத்தகுறி தப்பாது என்பது போல திமுக வைத்த குறி தப்பாது என நிரூபிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை தூக்கியெறிய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, சிலரை கட்டாயப்படுத்தி கட்சி துவங்க வைக்கப்படுகிறது. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஆனால், அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்.அர்ச்சுனன் குறி போல், திமுக குறி தப்பாது என்பதை நிரூப...