பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி!
பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அ.தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் வேட்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து வருகிறார்.
இன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்...









