ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சாத்தான்குளம் சம்பவம்  ரஜினி ரகசிய ஆறுதல்…

சாத்தான்குளம் சம்பவம் ரஜினி ரகசிய ஆறுதல்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரஜினியின் ரகசிய ஆறுதல்... சாத்தான்குளம் அப்பா, மகன் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, காட்டுமிராண்டி போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் பரிதாப மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை அறிக்கை வாயிலாகவோ, டிவிட்டர் பதிவின் மூலமாகவோ தெரிவித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் போலீசார் மீது லேசான தாக்குதல் நடந்த போது பொதும்க்களை ரவுடிகள் என குறிப்பிட்டு போலீசாருக்கு ஆதரவாக கொந்தளித்த ரஜினிகாந்த் இந்த சாத்தான்குளம் அப்பா, மகன் போலீசாரின் காட்டுமிராண்டி தனமான கொலை வெறி தாக்குதலில் பலியாகி இத்தனை நாள் ஆன பிறகும் அது குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். திடீ...
நன்னடத்தை விதி!? சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கலா!?

நன்னடத்தை விதி!? சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கலா!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நன்னடத்தை விதி!? சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கலா!? சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு அவர் சிறையில் இருக்க வேண்டும். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், கடந்த 2014-ம் ஆண்டு 24 நாட்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையிலும் இருந்தார். இரண்டையும் சேர்த்தால், 37 நாட்கள் ஆகிறது. அவரது தண்டனை காலத்தில் இந்த 37 நாட்கள் கழிக்கப்பட்டுவிடும். மேலு...
அதிகார அமைப்புகளின் அத்துமீறலை இனியும் அனுமதிக்க கூடாது – சூர்யா ஆவேசம்

அதிகார அமைப்புகளின் அத்துமீறலை இனியும் அனுமதிக்க கூடாது – சூர்யா ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "'அதிகார அத்துமீறல்‌' முடிவுக்கு வரவேண்டும்‌! 'மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ 'லாக்கப்‌ அத்துமீறல்‌' காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. 'இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌' என்று கடந்து செல்ல முடியாது. போலீஸாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்‌. நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, 'இயந்திர கதியில்‌' சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌. சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்...
கொரானா வந்தாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள் – ராதாகிருஷ்ணன் IAS ஆலோசனை

கொரானா வந்தாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள் – ராதாகிருஷ்ணன் IAS ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார மையத்தின் கருத்துகளைக் கேட்டு கொரானா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். நாளொன்றுக்கு 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில் நாளொன்றுக்கு 3,000 பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 9,000-10,000 ஆக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 26) வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். முன்பே ஏன் பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆரம்பத்தில், கொரானா பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். படிப்படியாகத்தான் அனுமதி அளித்தது. தமிழ்நாட்டில் ...
கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் இல்லாததால் கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரானா பரவியுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி இணைத்துள்ளார். பிரதமர் மோடி அமைதியாக உள்ளார் என்றும், கொரானாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்து விட்டார் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்....
அடுத்ததாக ஒரு திமுக எம்.எல்.ஏ.க்கு வைரஸ் தொற்று உறுதி!

அடுத்ததாக ஒரு திமுக எம்.எல்.ஏ.க்கு வைரஸ் தொற்று உறுதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அடுத்ததாக ஒரு திமுக எம்.எல்.ஏ.க்கு வைரஸ் தொற்று உறுதி! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. கொரானா தொற்று பாதிப்புக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் அரசுவுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது....
வைரஸ் தொற்றால் பலியான ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் முதல்வருக்கு TMJA கோரிக்கை

வைரஸ் தொற்றால் பலியான ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் முதல்வருக்கு TMJA கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *வைரஸ் தொற்றால் பலியான ராஜ் TV ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை* *ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் வைரஸ் தொற்றால் மரணம். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது* கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அரசின் காப்பீடு இருக்கிறது. ஆனால், எவ்வித சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் இரவும் பகலுமாக அவர்களுக்கு ஈடாக பத்திரிகையாளர்களும் கொரானா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்- ஊடகவியலாளர்களின்...
“போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்” – ராகுல்காந்தி கடும் கண்டனம்

“போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்” – ராகுல்காந்தி கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைத...
சாத்தான் குளம் அப்பா,மகன் மரணத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் – கோர்ட்

சாத்தான் குளம் அப்பா,மகன் மரணத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் – கோர்ட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘விசாரணைக் கைதி மரணம் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்காக காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்’...
சாத்தான்குளம் அப்பா,மகன் மரணத்திற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிக்கை

சாத்தான்குளம் அப்பா,மகன் மரணத்திற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்தரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில...