சனிக்கிழமை, மே 2
Shadow

கொரானா வந்தாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள் – ராதாகிருஷ்ணன் IAS ஆலோசனை

 

கொரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார மையத்தின் கருத்துகளைக் கேட்டு கொரானா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். நாளொன்றுக்கு 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில் நாளொன்றுக்கு 3,000 பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 9,000-10,000 ஆக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 26) வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம்.
முன்பே ஏன் பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆரம்பத்தில், கொரானா பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். படிப்படியாகத்தான் அனுமதி அளித்தது. தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 70% அரசுப் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கையை வைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழ்நாட்டின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். பட்டிதொட்டி எல்லாம் சென்று இரவு, பகலாக கொரானா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன . இதனால் அறிகுறியற்ற தொற்றாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. சிகிச்சை அளிக்காததால் ஒருவர் உயிரிழப்பதைத் தடுக்க இதுதான் வழி.

ஊரடங்கால் கொரானா தொற்று மற்றவர்களுக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது.

இந்திய மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், ஐ.சி.எம்.ஆர். என அனைத்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, நோய் வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான உணவு, அலோபதி மருத்துவம் வழங்கப்படுகிறது. ‘ரெம்டெசிவிர்’ வரை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கெனவே உள்ள மருந்துகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. 11 வகையான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுகின்றன.

கொரானா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 56% மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1.28% தான் இறப்பு விகிதம். ஒருவர் இறந்தாலும் இறப்புதான். அதனை நியாயப்படுத்தவில்லை.

ஆனால், தொற்று வந்தவுடன் தற்கொலை செய்வது, ஓடிச்செல்வது கூடாது. தொற்று வந்தவர்களை வசிக்கும் பகுதிகளில் புறக்கணிக்கக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலேயே இது வேகமாகப் பரவுகிறது, மற்றபடி, சளி, காய்ச்சல் போன்று இதுவும் சாதாரணமானதுதான். இதர நோய்களுடன் இது வித்தியாசமானது அல்ல என்றார்.

413 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன