நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் – விமர்சனம்
நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் - விமர்சனம்
ஆக்ஷன் ஹீரோ ஆக தன்னை முன்னிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார் சந்தானம். விமர்சனத்தை பார்ப்பதற்கு முன் ஹீரோ ஆக நிலை நிறுத்தி கொள்ள சந்தானம் ரொம்பவே மெனக்கொட்டிருக்கிறார். உடல் அமைப்பிலும், நடனத்திலும், ஆக்ஷனிலும் நடிப்பிலும்... ஆனால் அவரின் வழக்கமான காமெடி நையாண்டி முத்திரை பல இடங்களில் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இனி கதை...
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்
சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் வி...









