‘சிறை’ படத்தின் பிரமாண்டமான வெற்றி கொண்டாட்ட விழா!
‘சிறை’ படத்தின் பிரமாண்டமான வெற்றி கொண்டாட்ட விழா
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் எல்கே.அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சிறை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடிய நிலையில், 75 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி, அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான மிக சிறந்த படம் என்ற பெருமையை பெற்றதோடு, இப்படத்தின் வெற்றியை தற்போது வரை திரையுலகினர் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ...









