சாய் துர்கா தேஜ் நடிப்பில் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG) விரைவில்…
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP) இயக்கத்தில், K. நிரஞ்சன் ரெட்டி (K Niranjan Reddy ) – சைதன்யா ரெட்டி (Chaitanya Reddy ) ஆகியோர் தயாரிப்பில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் ₹125 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது சாய் துர்கா தேஜ் அவர்களின் இதுவரையிலான திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும்.
செப்டம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கும் படப்பிடிப்பில், பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கும் அதிரடியான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள் படமாக்கப்படவுள்ளது. இதில் சாய் துர்கா தேஜ், ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் மோதும...









