யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம்(P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
*யோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம்(P.O)' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!*
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம்(P.O)' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது.
'Tootu Madike' போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் 'Veerappan', 'Sooryavamsi', 'Vaanku' (தயாரிப்பு), 'Nalla Samayam' (விநியோகம்), 'Rudhiram' (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் ப...









