திரைப்படங்கள்
கேன்ஸ் பட விழாவில் கூண்டுக்குள் நூதன போராட்டம் நடத்திய மல்லிகா ஷெராவத்
பாலியல் குற்றங்கள் உலகளாவில் அதிகரித்துள்ளன. ஹாலிவுட் படங்களிலும் இந்திய திரையுலகிலும் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குழந்தைகளும் இந்த கொடுமைகளில் சிக்குகிறார்கள். பாலியல் வன்மங்களுக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்யும் பாதகங்களும் நடக்கின்றன.
இதற்கு எதிரான குரல் தற்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் ‘மீடூ’ இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டத்துக்கு பிறகு திரையுலக பெண்களை பாதுகாக்க புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் பூட்டப்பட்ட கூண்டுக்க...
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா… – விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விஜய் வாழத்துக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
'என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக ...
ஐஸ்வர்யாராய் படத்தில் என்னை தவறாக சித்தரித்துவிட்டனர் – ரிச்சா சத்தா வேதனை
கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் ஷகிலா வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. இந்தி திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள இவர் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சரப்ஜித் இந்தி படத்திலும் நடித்து இருந்தார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா சத்தா அளித்த பேட்டி வருமாறு:-
“நான் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நடிக்க வரவில்லை. என்னுடையை ஒவ்வொரு படத்திலும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதைதான் விரும்புகிறேன். கதாபாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதிக்க போராடுகிறேன். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேனே தவிர எவ்வளவு பணம் வருகிறது என்று கணக்கு பார்க்க மாட்டேன்.
அப்படிப்பட்ட என்னை ஐஸ்வர்யாராய் நடித்துள்ள சரப்ஜித் படத்தில் தவறாக சித்தரித்து விட்டனர். அது வேதனையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் எதற்காகத்தான் நடித்தோமோ? என்று நினைக்க த...
சூர்யா ஜோடியாகும் சாயிஷா சய்கல்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.
இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிக்க, சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு...
ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்
நடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்றது கிடையாது. கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி.
இப்போது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமவுலி அடுத்து ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.
கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எ...
நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’
நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.
படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்...
பட வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனுக்கு விற்கப்பட்ட “கடைக்குட்டி சிங்கம்”.. !
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. விவசாயியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் கார்த்தி, அதைப் பெருமையாகச் சொல்லும் விதத்தில் தன்னுடைய புல்லட்டின் முன்னால் ‘விவசாயி’ என எழுதி வைத்துள்ளார்.
‘வனமகன்’ சயீஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரியா பவானிசங்கர் கார்த்தியின் மாமா பெண்ணாக நடித்துள்ளார்.
படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமை, அமேஸான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டுள்ளது.
படம் ரிலீஸான பிறகு சில மாதங்கள் கழித்து அமேஸான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். படம் ரிலீஸுக்கு முன்பே அமேஸானுக்கு விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக...
மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால் கடைசியாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேலும் ஒரு முக்கிய பிரபலம் இப்படத்தில் இணைந்திருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரி...


