ஸ்டண்ட் சில்வா தலைமையில் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயா, அஜ்மல் பங்கேற்ற பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி!
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்திற்காக அதிக பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு வரும் பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி
சொந்தமாக பேருந்து வாங்கப்பட்டு ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா தலைமையில் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயா, அஜ்மல் பங்கேற்பு
‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் ஆக்ஷன் டீசர் விரைவில் வெளியாகிறது
சச்சின் சினிமாஸோடு இணைந்து ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிர...









