விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் “மாஸ்டர்”
விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் "மாஸ்டர்"
மாஸ்டர் படத்தை நம்பி தான் மொத்த இந்திய சினிமாவே இருக்கிறது என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. மாஸ்டர் படத்தின் இந்திய வெளியீட்டை பார்த்துவிட்டு தான் மற்ற நடிகர்களும் தங்களது படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.இதில் பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் படங்களும் அடங்கும்.
இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் தற்போது இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். சமீபத்தில்தான் மாஸ்டர் படம் தமிழில் யுஏ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது ஹிந்தி டப்பிங்கும் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக...








