வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

திரைப்படங்கள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்! பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை ராஜமவுலி வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா நடிப்பதாக ...
கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கார்த்தியின் சுல்தான் அப்டேட்! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது....
எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்!

எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்! கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இசையை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்! மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணாவு...
பிரபல நடிகர் இணைந்த விக்ரம் வேதா ரீமேக்!

பிரபல நடிகர் இணைந்த விக்ரம் வேதா ரீமேக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல நடிகர் இணைந்த விக்ரம் வேதா ரீமேக்! மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது இவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷனின் 25வது படமான இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் தொடங்க இருக்கிறார்கள்....
சைலன்டாக  ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்!

சைலன்டாக ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சைலன்டாக ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில், டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்திய தகவல் படி சுல்தான் படத்திற்கும், யுவன் தான் பின்னணி இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பத...
அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது!

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது! அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க உள்ளனர். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கின்றனர். அனுமதி கிடைக்க தாமதமாவதால், கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அதேபோல் நடிகர் அஜித் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிற...
சியான் 60 படத்தில் அனிருத்திற்கு பதில் சந்தோஷ் நாராயணன் !

சியான் 60 படத்தில் அனிருத்திற்கு பதில் சந்தோஷ் நாராயணன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சியான் 60 படத்தில் அனிருத்திற்கு பதில் சந்தோஷ் நாராயணன் ! ‘கோப்ரா’, ‘துருவநட்சத்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம், தற்போது ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அனிருத் விலகியதற்கான காரணம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், அவர் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், பிஸியாக இருப்பதால், அவரால் ‘சியான்-60’ படத்தில் பணிபுரிய முடியவில்லையாம். அதனால்தா...
அனுமதியின்றி மதுரையில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது!

அனுமதியின்றி மதுரையில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர். மதுரை சிந்துப்பட்டி கைலாசநாதர் கோவில் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடப்பதாக திடியன் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு 50 குழந்தைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. பிரபாகர், இதுதொடர்பாக இயக்குனர் செந்தில்குமார் (வயது 51) என்பவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக சிந்துப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். செந்தில்குமார் ஒரு சில டாகுமெண்டரி சினிமா படங்களை எடுத்து உள்ளார். தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்...
பூஜா ஹெக்டே 9 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி!

பூஜா ஹெக்டே 9 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜா ஹெக்டே 9 ஆண்டுகளுக்கு பின் விஜய் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே கூறுகையில், “பிரம்மாண்ட படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உற்சாகமாக உள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்...