‘தளபதி’யை தொடர்ந்து ‘கேணி’யில் இணைந்த கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி..!
ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சஜீவ் பி.கே., ஆன் சஜீவ் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘கேணி’. ‘கிணறு’ என்ற பெயரில் மலையாளத்திலும் உருவாகியுள்ள இந்த படத்தை மலையாளத்தில் 7 படங்களை இயக்கியுள்ள எம்.ஏ.நிஷாத் இயக்கியுள்ளார். இவர் தமிழில் இயக்கும் முதல் படமான ‘கேணி’யில் நாசர், பார்த்திபன், பசுபதி, ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, அர்ச்சனா, பிளாக் பாண்டி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
இந்த படத்தின் பாடல்களுக்கு மலையாள இசை அமைப்பாளர் எம்.ஜெயச்சதிரன் இசை அமைக்க, ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற பாடல்களை நடிகை சுஹாசினி வெளியிட்டார்.
இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ.நிஷாத் கூறும்போது, ‘‘கேணி’ நான் இயக்கும் முதல் தமிழ் படம். நான் இதற்கு முன் இயக்கிய அனைத்து மலையா...









