விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு
‘பத்தா’ படத்தின் 'வேர்ல்ட் ஆஃப் பத்தா' டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் 'வேர்ல்ட் ஆஃப் பத்தா' டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. கதை குறித்த முக்கிய தகவல்கள் எதையும் வெ...









