‘ ராமாயணா’ படத்தில் ரன்பீர் கபூர் – யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்குமாம்., அது ஏன்?
*' ராமாயணா' படத்தில் ரன்பீர் கபூர் - யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணம் இதுதான்..*
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ' ராமாயணா ' எனும் திரைப்படம் - சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் - உலக தரம் வாய்ந்த VFX குழு - நட்சத்திர நடிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள் - என ' ராமாயணா ' இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும், உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும்... அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது.
''இப்படத்தின் தயாரிப்பாள...









