வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

ஏஸ் விமர்சனம் 3/5

 

 

 

ஏஸ் விமர்சனம் 3/5

 

விஜய்சேதுபதி,யோகிபாபு கூட்டணியில் மீண்டும் ஒரு முழு வெளி நாட்டுப்படம்… என்னது வெளி நாட்டுப்படமா அப்ப தமிழ்படமில்லையான்னு கேக்காதீங்க… முழுசா வெளி நாட்ல படம்புடிச்சதால அப்படி…

 

ஏன் இந்த முத பத்தின்னு விமர்சன கடைசி பத்தியில சொல்றேன்…

கதைப்படி மலேசியா ஏர்ப்போர்ட்டில் யோகிபாபுவை சந்திக்கிறார் விஜய்சேதுபதி… தன் ஊர்க்காரன் என நினைத்து கொண்டு விஜய்சேதுபதிக்கு வேலை வாங்கி தருகிறார் யோகிபாபு.

விஜய்சேதுபதி தங்கியிருக்கும் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் ஹீரோயின் ருக்மணிக்கு வளர்ப்பு தந்தையால் பணச் சிக்கல் வருகிறது… அதை சரி செய்ய வில்லன்  நட்த்தும் சூதாட்ட கிளப்பில் சென்று விளையாடி அதிக பணம் ஜெயிக்கிறார். இதை பார்த்த வில்லன் அவினாஷ் தந்திரமாக விஜய்சேதுபதியுடன் விளையாடி  தோற்க்கடிக்கிறார். இதனால் கடனாளியாகிறார் விஜய் சேதுபதி. அதோடு அவர் பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக் கொள்கிறார் வில்லன் அவினாஷ்.

பாஸ்போர்ட்டை விஜய்சேதுபதி மீட்டாரா? வில்லன் கடனில் இருந்து தப்பித்தாரா? சூதாட்ட்த்தில் ஏமாற்றிய வில்லனை ஹீரோ விஜய்சேதுபதி என்ன செய்தார்? இதுதான் ஏஸ் கதைன்னு நினைச்சா அதான் இல்ல…

பர்ஸ்ட் ஆப் இப்படி முடிஞ்சதும் பின் பாதி கதை தொடங்குனதும் ஒரு வங்கிக்கு போற பணத்தை விஜய்சேதுபதி கொள்ளை அடிக்கிறாரு… அது இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார்? போதாகுறைக்கு லாட்டரியில அவருக்கு 20 மில்லியன் பணம் கிடைக்குது அத எப்படி அவர் வாங்குறாரு? இதெல்லாம் தான் ஏஸ் பட்த்தோட திரைக்கதை…

விஜய்சேதுபதி வழக்கம் போல அலட்டிக்காம நடிச்சிட்டு கொஞ்சம் ஆக்‌ஷன் பன்னிட்டு போறார். ருக்மணி குடுத்த வேலைய செய்திருக்கிறார்.

யோகிபாபு காமெடி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல நேரங்களில் ”கடுப்பேத்றாங்க மை லாடு” தான்.

இயக்குனர் ஆறுமுககுமார் கதை யோசிச்சது ஓகே… ஆனா திரைக்கதையில சுவாரஸ்யம் கொடுக்க மறந்ததால படம் என்ன சொல்ல வருதுன்னு தெரியாம ரசிகர்கள் முழிக்க வாய்ப்பு இருக்கு.

மொத்ததுல விஜய்சேதுபதியும், யோகிபாபுவும் இணைஞ்சி முழுசா வெளி நாட்டுலயே எடுத்த படமான ஜூங்காவுக்கு ரசிகர்கள் என்ன மார்க் குடுத்தாங்களோ அதவிட கொஞ்சம் கூடுதலா ஏஸ் படத்துக்கு கிடைக்கலாம்.

 

 

308 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன