பெண்களை ஷாக் ஆக்கும் “ராபர்” கோடங்கி விமர்சனம் 3/5
பெண்களை ஷாக் ஆக்கும் “ராபர்” கோடங்கி விமர்சனம் 3/5
கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞன் ஒருவன், பண ஆசைக்காகத் தடம் மாறுவதையும், அந்தப் பண போதை அவனை எப்படி கொடூரமானவனாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு செல்கிறது என்பதையும் நகை பரிமாற்றத் தொடர்புகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத் தனங்களையும் சொல்லும் திகிலான கதைதான் ‘ராபர்’.
ஒவ்வொரு நாளும் பேப்பரிலும், டிவியிலும் வரும் நகைப் பறிப்பு செய்திகளை கேட்டாலும் , அதில் அப்பாவி பெண்கள் பலியானது தெரிந்தாலும் அது 'யாருக்கோ' என்று எளிதில் கடந்து செல்கிறோம். ஆனால் நகைப்பறிப்புக்குப் பின் உள்ள 'திருட்டு' நெட்வொர்க், அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், அந்த நகைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற விவரத்தை பரபரப்பாக திகில் மூடில் தர முயற்சித்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.எம்.பாண்டி.
சிறைக்குப் புத...








