ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்'
ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், கடத்தல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் மறுபக்கம் குறித்து விறுவிறுப்பாக பேசுகிறது
'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தை, இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ.சமய முரளி இயக்குகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் அவரே எழுதியுள்ளதோடு ,பிண்ணனி இசையும் அமைத்துள்ளார்.
2008-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (IRS) அலுவலர்கள் பிரிவைச் சேர்ந்த தோ.சமய முரளி, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறைகளில் நீண்ட காலமாகப் பணியாற்றியுள்ள...









