“ரைட்” கோடங்கி விமர்சனம் 2.5/5
போலீஸ் - அரசியல் அதிகார மையம் இவை இரண்டுக்கும் நடுவே மிரட்டல்வகை கதை சொல்ல முயற்சிக்கும் படம் தான் ரைட்...
தலைப்புக்கு ஏத்த மாதிரி ரைட்டா ... போகுமா படம் இல்ல ராங்கா ஆகிடுமா?
கதைப்படி சென்னை அருகிலுள்ள கோவளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நட்டி, ஒரு அமைச்சர் மகனின் நண்பர்களை கைது செய்து உள்ளே அடைக்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி அவர் ரோந்து சென்றிருக்கும் நேரத்தில், அமைச்சர் மகன் தன்னுடைய ஆட்களை காவல் நிலையத்திலிருந்து அழைத்து செல்கிறான். அதற்குள், “காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என்ற மிரட்டல் தொலைபேசி அழைப்பு வருகிறது.
இந்நிலையில், காவல் நிலையத்துக்குள் சிக்கிக் கொள்ளும் எழுத்தர் மூணார் ரமேஷ், துணை ஆய்வாளராக வரும் கதாநாயகி அக்ஷரா ரெட்டி, தன்னுடைய மகன் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண் பாண்டியன், சில காவலர்கள், மேலும் இரண்டு கைதிகள் – இவ...









