சனிக்கிழமை, மே 30
Shadow

திரைப்படங்கள்

கிருத்திகா உதயநிதியின் “காளி” சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி..!

கிருத்திகா உதயநிதியின் “காளி” சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'காளி'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான போஸ்டருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருப்பதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் சிங்கள் ட்ராக் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடப்படுத்துள்ளது. இப்படத்தின் விளம்பர யுக்திகளை இப்பாடல் வெளியீட்டின் மூலம் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.   இப்படத்தில் விஜய் ஆண்டனியின் மற்ற இரண்டு ஜோடிகளாக ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் ம...
ஒரே நாளில் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் நடத்திய 4 பட விழாக்கள்..!

ஒரே நாளில் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் நடத்திய 4 பட விழாக்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஒரே நாளில் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் நடத்திய 4 பட விழாக்கள்..! ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் சார்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியும், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், பாகமதி படங்களின் டிரைலர் வெளியீட்டு விழாக்களையும் சேர்த்து ஒரே இடத்தில் 4 படங்களின் மெகா சினிமா விழா நடத்தப்பட்டது. மதியம் 3 மணிக்கு துவங்கிய விழா இரவு 10 மணிவரை நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஆர்யாவின் கஜினிகாந்த் பட டீசர் வெளியீடு நடைபெற்றது. இருட்டு அறையில் முரட்டுகுத்து பட நாயகன் கவுதம்கார்த்திக் டீசரை வெளியிட்டார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீசர் வெளியானது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிநடைபெற்...
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2..! விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். https://youtu.be/GRadOjRR4qk இதனை முன்னிட்டு இந்த படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்று, படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. முதலில் இந்த படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இப்போது ஃபிப்ரவரி- 2, ரிலீசுக்கு நல்ல நாள் குறித்துள்ளார்கள். https://youtu.be/um0ndnAyc8c இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக்குடன் காயத்ரி, நிகாரிகா கதாநாயகிகளாக நடிக்க, இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இச...
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..!

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..! ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்.ரவிக்குமார், தன்னுடைய முதல் படத்திலேயே ‘டைம் மிஷின் கான்செப்ட்’டை மையமாக வைத்துப் படமாக்கி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில், தற்போது ரவிகுமாரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படம் முடிவடைந்ததும் ரவிகுமார் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 5வது படைப்பாக உருவாகும் இப்படம் அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறதாம். பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இப்படம் 2019ஆம் ஆ...
‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!

‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஜய்சேதுபதி..! தமிழ் நடிகர்களில் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர்கள் ஒரு சிலர்தான். மேக்கப் போடுவதற்கே பல மணி நேரம் செலவழித்து அந்த கேரக்டராகவே மாறும் நடிகர்கள் வரிசையில் விஜய்சேதுபதியும் இணைந்து கொண்டார். கதைக்கு கதை வித்தியாச கேரக்டர்கள் தேர்வு செய்யும் விஜய் சேதுபதியின் இப்போதைய தேர்வு பாலாஜி தரணிதரணின் புதிய படமான சீதக்காதி. மிக வித்தியாசமான கதைக்களமாக உருவாக உள்ள சீதக்காதியில் விஜய்சேதுபதி இளவயது 30, நடுத்தர வயது 50, முதிர்ந்த வயது 75 என 3 கேரக்டரில் நடிக்க இருக்கிறார். விஜய்சேதுபதிக்கு மேக்கப் போட ஹாலிவுட் பிரபல மேக்கப் கலைஞர் க்ரெக் கெனான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மேக்கப் போட்டதற்கு 3 முறை ஆஸ்கார் விருது வென்றவர். இந்த படத்தில் நாடக நடிகர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர...
“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..!

“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
“ டீக்கடை பெஞ்ச் “ செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவைப்படம்..! அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “இந்த படத்தில் ராம கிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ராம்ஷேவா. இந்த இயக்குனர் ராம் ஷேவாவிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.. “இது செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்க...
சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும்  ‘மதுரவீரன்’ பட பாடல்..!

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் ‘மதுரவீரன்’ பட பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம், வீடியோ
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இந்த படத்தில் ‘என்ன நடக்குது நாட்டுல’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. https://youtu.be/6yzZPzwLZwc சமீபத்தில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ள இப்பாடல் குறித்து இயக்குனர் பி.ஜி.முத்தையா கூறும்போது, ‘‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர், ‘‘என்ன நடக்குது நாட்டுல’ என்று தொடங்கும் பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இப்போது அந்த பாடல் மக்களிடம் சென்றடைந்துள்ளது. அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்கு...
ஜனவரி26ல் களமிறங்கும் உதயநிதியின் ‘நிமிர்’..!

ஜனவரி26ல் களமிறங்கும் உதயநிதியின் ‘நிமிர்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி முதலானோர் நடிக்கும் படம் ‘நிமிர்’. மலையாள ’மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றுள்ளது. https://youtu.be/Us4SdcEh--4 ‘நிமிர்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோகநாந்த் இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் ‘நெஞ்சில் மாமழை…’ என்று துவங்கும் பாடலை சமீபத்தில் எ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ‘நிமிர்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....