’என்ன விலை’ திரைப்பட கோடங்கி விமர்சனம் 3/5
கருணாஸ் – நிமிஷா சஜயன் நடிப்பில், சஜீவ் பழூர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘என்ன விலை’ ஒரு சாதாரண மனிதன், அதிகார அமைப்பில் சிக்கிக்கொண்டால் அவனுடைய வாழ்க்கை எப்படி தலைகீழாகிறது என்பதை அழுத்தமாக பேச முயற்சித்த படம் என்ன விலை…
ஒரு வரிக்கதை...
ராமேஸ்வரத்தில் திதிக்காக கடலில் பக்தர்கள் வீசும் சில்லறைகளை சேகரித்து குடும்பத்தை நடத்தும் கருணாஸ்.
ஒருநாள் அவருடைய கையில் எதிர்பாராத விதமாக விலை உயர்ந்த தங்கம் கிடைக்கிறது.
“இது எனக்கு வேண்டாம்… உரியவர்களிடம் ஒப்படைத்துவிடலாம்” என்று அதை போலீஸிடம் கொடுக்கிறார்.
அதுதான் அவருக்கு வினையாகிறது!
நேர்மையாக நடந்துகொண்ட மனிதரே திருட்டு வழக்கில் சிக்குகிறார்.
அதற்குப் பிறகு போலீஸ் → வழக்கு → நீதிமன்றம் → வழக்கறிஞர் என்று கதை நகர்கிறது…. நிற்கிறது… முடிவை நோக்கி ஓடுகிறது…
கருணாஸ்
இதுவரை நாம் பார்த்த கருணாஸை ...









