Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!
Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, #STR49 படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. “இதயம் முரளி” படத்தின் ம...









