உதயநிதி’யின் கண்ணே கலைமானே படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!
உலகளவில் அன்பை திகட்ட திகட்ட சொன்ன எவ்வளளோ காவியங்களை நாம் கண்டிருந்தாலும் அன்பு என்றைக்குமே சலிக்காதது. அதனுடன் நம்பிக்கை விதைக்கும் விஷயங்களும் சேரும்போது, உலகளாவிய ரசிகர்களை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது எளிதில் சென்றடையும். உண்மையில், இந்த கூறுகள் தான், எந்த வகை படமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். கண்ணே கலைமானே தலைப்பே காதலுடன், மனதை வருடும் ஒரு பேரின்பம். அதுவும் இயக்குனர் சீனு ராமசாமி படம் என்றாலே தணிக்கை குழுவில் 'யு' சான்றிதழ் தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை. உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றி...









